நோக்கம்

எம்.ஐ.டி. தமிழ் மன்றமானது, நமது கல்லூரியில் செயல்படும் மாணவர்கள் அமைப்புகளில் ஒன்று. தமிழ் மன்றமானது 2016ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்டது. தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக செயல்பட்டு வருகிறது.


தமிழ் மன்றம் மாணவர்களின் படைப்பாற்றலையும் கலைத்திறனையும் வெளிக்கொணர்வதற்கு அர்பணிக்கப்பட்ட களம் ஆகும். மாணவர்களின் இலக்கிய ஆர்வத்தை கூர்மையாக்குதல், அறிவியல் தமிழ் வளர்த்தல் மற்றும் சமூகப் பார்வையை விரிவாக்குதல் என்ற முனைப்புடன் செயல்படும். தாய் மொழியின் வளம்பாடும் வானம்பாடிகளாய் உளம் கொண்டு எழ இம்மன்றம் துணை நிற்கும். தாய்மொழி மூலம் தன்னம்பிக்கை ஊற்றெடுக்க தக்கதோர் வழிகாட்டியாய் செயல்படும். எனவே, இம்மன்றமானது தமிழை வளர்க்க பாடுபடும் – தலை நிமிர்ந்து நிற்கப் போராடும்.