குறிக்கோள்

எம்.ஐ.டி. தமிழ் மன்றம் கீழ்காணும் குறிக்கோள்களை பின்பற்றுகிறது.

  1. நமது கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மொழி பற்றை வளர்த்தெடுக்கவும், ஊக்குவிக்கவும் ஏற்றதொரு களமாக அமைவது.

  2. அறிவியல் தமிழ், இலக்கியத் தமிழ் ஆகிய இரண்டு களங்களிலும் தீவிரமாக இயங்குவது.

  3. அறிவியல் புனைவுகள், தொழிநுட்பக் கலைச்சொல்லாக்கம், கட்டுரை மொழியாக்கம் ஆகிய பிரிவுகளில் கவனம் செலுத்தி, தமிழ் வழி தொழில்நுட்பக் கல்வியை மாணவர்களிடையே சென்று சேர்ப்பது.

  4. புத்தகத் திறனாய்வு, குழு விவாதம், பட்டிமன்றம், மேடைப் பேச்சு ஆகியவற்றின் மூலம் மாணவர்களிடையே மொழித்திறனை வளர்த்தெடுப்பது.

  5. மாணவர்களின் படைப்புகளைத் தாங்கி வரும் “தனிச்சுற்று பத்திரிக்கை” தொடங்குவது.

  6. “எழுத்தாளர் – மாணவர்கள்” சந்திப்புகளை ஏற்பாடு செய்வது.

  7. சிலம்பம், கரகாட்டம், வீதிநாடகம் ஆகியவற்றின் மூலம் நமது கல்லூரி மாணவர்களிடையே தமிழரின் பாரம்பரிய கலைகலை வளர்ப்பது.

  8. “தமிழ் மன்ற கலாச்சார விழா”வை வருடத்திற்கு ஒருமுறை நடத்தி, மன்றத்தின் நோக்கங்களை பரவலாக்குவது.