தமிழ் மன்றம் பயணிக்கும் களங்கள்


அறிவியல்

அறிவியல் புனைவு, கலைச்சொல்லாக்கம், அறிவியல் கட்டுரைகள், மொழியாக்கம், தொழில்நுட்பக் கட்டுரைகள் - ஆய்வறிக்கைகள் என பல களங்களில் பயணம் செய்து மாணவர்களுக்கு அறிவியல் தமிழ் ஆர்வத்தை ஊக்குவிப்போம்.

தத்துவம்

உலகளவில் புகழ் பெற்ற தத்துவங்கள் பலவற்றை தமிழ் அறிஞர்கள் மொழி பெயர்ப்பு செய்துள்ளனர். மேலும் தமிழ் மொழியில் பல வாழ்வியல் மேலாண்மைத் தத்துவங்கள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றை மாணவர்களிடையே கொண்டு சேர்த்து விவாதிப்பதன் மூலம், தக்க அறிவையும் வளர்த்தெடுக்க முடியும். தத்துவ விசாரணையின் வழி வாழ்வை பற்றிய விசால பார்வையும், மேம்பட்ட புரிதலும் கிடைக்கப்பெற வழி வகுப்போம்.