தடைகளை தகர்த்தெறி பெண்ணே !


பிரதீபன் வெங்கடேசன்

21 அக்டோபர், 2018

  கருவறையில் உள்ளவர் கடவுள் எனில்
  அந்த கருவறையை கொண்ட அவள் யார்???
  இறைவனின் மேலோர் நீ பெண்ணே!
  பதினெட்டு படியிலும் உன் பாதம் பதியட்டும் பெண்ணே!
  உன் கருப்பையின் குருதி புனிதம் பெற்றதே!
  உன் புனித குருதியால் அந்த இறைவனும் புனிதமாகட்டும்!
  பதினெட்டு படியும் பரிசுத்தமாகட்டும்..!
  இறைவன் புனிதமாகவும்
  பதினெட்டும் பரிசுத்தம் பெறவும்
  உன் பாதம் நிச்சயம் பதியவேண்டும் பெண்ணே..!
  ஆணும் பெண்ணும் கலந்தவரே அவர் தந்தை!
  தாய் முழுப்பெண் - எனில்
  அந்த இறைவனின் உடலில்
  நான்கின் மூன்று பங்கு பெண்ணில் செல்கள் இருக்கும்!
  எனில் அவர் எவ்வாறு பெண்களை வெறுப்பார்!
  இத்தனை ஆண்டுகள் தந்தையின் அன்பை மட்டும் பெற்றவருக்கு
  இனிமேனும் தாய் அன்பை கிடைக்க பெண்ணே நீ செல்ல வேண்டும்!
  உனதன்பை பெற அவர் ஏக்கத்தோடு காத்திருக்கிறார்!
  தாயிடம் பிரிந்த மகனின் வேதனையை தாங்கள் மட்டுமே அறிவீர்கள்!
  உந்தன் பாதம் பட்டால்தான் அவர் இருப்பிடமும் புனிதம் பெரும் பெண்ணே!
  கருப்பையின் குறுதியில் உருவாகியவர்கள் புனிதமானவர்கள்!
  ஆனால் அந்த கருப்பையின் குறுதியை உருவாக்கியவள் தீண்டத்தகாதவள்!
  ஆணாதிக்கம் மேலோங்க!
  பெண்ணுரிமை மேலும் கீழிறங்க!
  அறிந்த ஒவ்வொரு ஆணும் நிச்சயம் வெட்கப்படுவான், ஆணாக இருக்க!
  நான் வெட்கப்படுகிறேன்..!
  தடைகளை தகர்த்தெறி பெண்ணே!
  உன் தவறென்று அங்கு எதுவும் இல்லை..!


  பிரதீபன் வெங்கடேசன் (பிரிவையும் நேசிப்பவன்😎)
  நான்காம் ஆண்டு, இழுப்பான் மற்றும் நெகிழி தொழில்நுட்பம்.